SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கோ நாட்டி எபோலா வைரஸ் தாக்குதலால் 700 பேர் உயிரிழப்பு...1041 பேருக்கு தீவிர சிகிச்சை...

1664
15/04/2019

எபோலா வைரஸ் தாக்குதலால் கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் 700 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.நா சபை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் 700 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,041 பேர் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசிகள் மூலம் சுமார் 70,000 பேருக்கு மேல் இந்த நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஆப்பிரிக்கா நாடுகளில் ஏற்பட்ட எபோலா வைரஸ் தாக்குதலில் 11,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்