SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனிப்பொழிவால் அலாஸ்காவாக மாறி வரும் அரேபியா..பனி பிரதேசமான பாலைவனம்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

1224
03/04/2019

துபாய்: உலகம் முழுவதும் பருவநிலை மாறி வருகிறது. வெப்ப நிலை அதிகமுள்ள பகுதிகளில் மழையும், பனி பொழிவும் அதிகரித்து வருகிறது. அதன் மாற்றம் பாலைவன பூமியான துபாயிலும் தெரிகிறது. பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவில் பனிமழை பொழிந்து அரேபியா அலாஸ்காவாக காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. சவுதி அரேபியாவின் வடகிழக்கு பகுதியில் சமீபகாலமாக கடும் பனி மழை பொழிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மலைகள் வெள்ளை பூக்களால் போர்த்தப்பட்டது போன்று ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. ஜோர்டான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள தபுக் மாகாணத்தின் ஜபல் அல் லாஸ் பகுதியில் பனியின் தாக்கம் அதிகமிருக்கிறது. சாலையெங்கும் பனி கட்டிகளால் நிறைந்து பாலைவன பிரதேசம் பனி பிரதேசமாக காட்சியளித்தது. அப்பகுதி மக்களை மிகுந்த உற்சாக பட வைத்ததுடன் சிறுவர் சிறுமியர் பனிகட்டிகளை எடுத்து விளையாடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • doublee_engineflightt1

    உலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!!!

  • chennai_rebbb

    சென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்

  • 11kudiyrasu12

    விண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்

  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்