SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

1004
21/03/2019

2020ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி கோப்பையை டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகிகள் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். ஒரு கிலோ 20 கிராம் எடைக் கொண்ட இந்த கோப்பையானது, பிங்க் மற்றும் தங்க நிறத்தில் ஐந்து இதழ்களை கொண்டுள்ளது. அதாவது, ஜப்பானில் பிரபலமான சக்குரா(செர்ரி பிளாசம்)வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள ஐந்து வளையங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த இதழ்களானது அமைக்கப்பட்டுள்ளது. டொகுஜின் யோஷிஓகா எனும் வடிவமைப்பாளர் இந்த கோப்பையை உருவாக்கி உள்ளார். 2011ம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டு மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில், நம்பிக்கை ஒளி நம் வழியே எனும் கருப்பொருளை மையமாக கொண்டு இந்த கோப்பையானது உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 121 நாட்களுக்கு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்