SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

1172
21/03/2019

நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் சிலரின் உடல்கள் ஒரே இடமான கிறிஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவில் புதைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். கிரைஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவிற்கு முதற்கட்டமாக 6 பேரின் சடலங்கள் உறவினர்கள், நண்பர்கள் சூழ அடுத்தடுத்து எடுத்து வரப்பட்டது. பின் சடலங்கள் புதைக்கப்பட்டு அங்கேயே இறுதிச்சடங்கும் நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய எராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து பலரின் சடலங்களும் அங்கேயே புதைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்