SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண் : 4.7 பில்லியன் பிரசவத்தில் ஒருமுறை நிகழும் அதிசயம்

963
19/03/2019

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த தெல்மா சியாகா என்ற பெண் ஒரே பிரசவத்தில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தெல்மா சியாகா பிரசவத்துக்காக டெக்சாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளி கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தெல்மா சியாகா, அதிகாலை 4.50 முதல் 4.59 மணிக்குள் 6 குழந்தைகளை பெற்றுள்ளார். அதில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் சியாகாவுக்கு பிறந்துள்ளனர். பிறந்த குழந்தைகள் 793 கிராம் முதல் 1.3 கிலோ கிராம் வரை எடையை கொண்டுள்ளன. அதனால் அந்த 6 குழந்தைகளும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தாயும் குழந்தைகளும் நலமுடம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த அதிசயமான பிரசவம் 4.7 பில்லியன் பிரசவத்தில் ஒருமுறை நிகழும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்