SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு

165
22/02/2019

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த குவன்பாறை பட்டாசு ஆலையில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் இடிந்து தரைமட்டமான மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பட்டாசுகள் வெடித்து கொண்டே இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆலையில் உள்ள அனைத்து அறைகளும் தரைமட்டமாயின. 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வெம்பக்கோட்டை, கோயில்பட்டி, திருவேங்கடம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்