SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரூவில் இந்திய விமானப்படையின் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! :விமானி ஒருவர் பலி

247
19/02/2019

கர்நாடகா மாநிலம் யெலஹங்காவில் பாதுகாப்பு துறை சார்பில், "ஏரோ இந்தியா - 2019” என்ற போர் விமானங்கள் கண்காட்சி நாளை தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் நிறுத்தப்படவுள்ளன.இதற்கான ஏற்பாடுகள் அங்கு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய விமானப்படையின் சூர்யா கிரன் அணியின் போர் விமானங்கள் இன்று சாகச ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. அப்போது இரு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.இரு விமானங்களும் குடியிருப்புகளுக்கு மத்தியில் விழுந்து எரிந்தன. விமானத்தில் இருந்த மூன்று விமானிகளில் இருவர் பாதுகாப்பாக வெளியேறினர். மற்றொரு விமானி உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் விமானங்கள் விழுந்ததன் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.எரிந்து கொண்டிருந்த விமான பாகங்களை பொதுமக்களும், தீயணைப்புத்துறையினரும் இணைந்து அணைத்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்