SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

481
19/02/2019

சீனாவில் விளக்குத் திருவிழா களைகட்டியுள்ளது. குளிர்காலத்தையொட்டி நடத்தப்படும் விளக்குத் திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.நிலவு காலாண்டர் அடிப்படையில், சீனாவில் விலங்குகளின் பெயரில் ஆண்டுகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி, தற்போது பன்றி ஆண்டு பிறந்துள்ளதை அடுத்து, நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.புத்தாண்டின் 15-வது நாளான செவ்வாய்க்கிழமை, விளக்குத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள நாங்கோங் சுற்றுலாப் பகுதியில் கையால் தயாரிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன.இது சீனாவின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், உலக தாவரவியல் பொழுதுபோக்கு பூங்காவைப் போன்று காட்சியளிக்கிறது. நடன நிகழ்ச்சிகளும் டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்டுள்ள விளக்குகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. இதேபோல, டென்மார்க்கில் குளிர்காலத்துக்கு வண்ணம் சேர்க்கும் வகையில், ஒளித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்