SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது : பொதுமக்கள் உற்சாகம்

190
11/02/2019

சென்னையில் டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. சென்னையில் 45.01 கி.மீட்டர் தூரத்திற்கான மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக முடிவடைந்தது. இந்த திட்டத்தின் இறுதி வழித்தடமான வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் வரையிலான 10 கி.மீட்டர் தூரத்திற்கான சேவையை திருப்பூரில் இருந்து காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி பச்சைகொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணைஅமைச்சர் ஹர்திப்சிங் புரி, தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், எம்.சி.சம்பத், சரோஜா, ஜெயவர்த்தன் எம்.பி மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட உடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ் வரையில் பயணம் செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்