SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

166
11/02/2019

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து 8 கால யாகசாலை பூஜைகள், கடந்த வியாழன் அன்று இரவு தொடங்கின. இன்று காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவு பெற்றன. இதைத் தொடர்ந்து இன்று காலை 9.10 மணிக்கு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர சுவாமி, நீலோத்பாலாம்பிகா சமேத நகவிடங்க செண்பக தியாகராஜ சுவாமி, சனீஸ்வர பகவான் ஆகிய பிரதான மூர்த்திகள், பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்