SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

615
24/01/2019

குருகிராம்: ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 5க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் 4 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கட்டிடம் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காசியாபாத் மற்றும் துவாரகாவை சேர்ந்த 3 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்