SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

712
24/01/2019

வெனிசுலா: வெனிசுலாவில் அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மதுரோவின் அரசுக்கு எதிராக அமெரிக்கா போர்க்கொடி உயர்த்தியுள்ளது. அதிபர் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், வெனிசுலா மக்கள் மதுரோவின் சட்டவிரோதமான அரசால் நீண்ட காலமாக துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்றும் இதனால் எதிர்க்கட்சித் தலைவரான யுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரோவை அகற்றும் போராட்டத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள மதுரோ, அமெரிக்காவுடனான அனைத்து அரசாங்க தொடர்புகளும் துண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்