SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

862
22/01/2019

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் நேற்று மாலை லேசான மழை தூறிய நிலையில், இன்று காலையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. லோதி சாலை, பாலம், ரிட்ஜ், அயநகர், பிரலத்பூர், அக்பர் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழையுடன் பனிமூட்டமும் நிலவியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன. IP எஸ்டேட் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.டெல்லியின் சுபாஷ் நகர் மற்றும் ஹரியானா மாநிலம் குருகிராம் ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக டெல்லியில் 15 ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால், தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதியுற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்