SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பமேளா விழாவின் 2-வது புண்ணிய தினமான பவுஷ் பூர்ணிமா : சுமார் 1 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்

198
22/01/2019

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகர் என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிற அலகாபாத்தில், கடந்த 15-ந் தேதி கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது.கும்பமேளாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி நேற்றைய தினம் பவுஷ் பூர்ணிமா தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. மேலும் இது கும்பமேளா விழாவின் 2-வது புண்ணிய தினமாக கருதப்பட்டது. எனவே இந்த நாளில் புனித நீராட பக்தர்கள் ஆர்வம் காட்டினர். நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் குவியத்தொடங்கினர். புனித நீராடி கடவுளை வழிப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1 கோடியே 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவந்த் சிங்கும் பக்தர் களுடன் நீராடினார். தொடர்ந்து பக்தர்கள் கும்பமேளாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த கும்பமேளாவின்போது மொத்தம் 12 கோடி மக்கள் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்