SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்ஸிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

837
21/01/2019

மெக்சிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்சிகோவில் திருடர்களால் சேதப்படுத்தப்பட்ட குழாயில் இருந்து 10 ஆயிரம் பேரல் எரிபொருள் பல அடி உயரத்துக்குப் பீறிட்டு வெளியேறியது. ஏற்கெனவே எரிபொருள் தட்டுப்பாட்டால் தவித்து வந்த ஹிடால்கோ மாநிலத்தின் லாஹியூலில்பன் கிராமத்தில் வசிக்கும் ஏராளமானோர் தகவல் அறிந்து அங்கு திரண்டு, கைக்குக் கிடைத்த பாத்திரங்களில், ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு போட்டி போட்டு பெட்ரோலை பிடித்தனர். இந்நிலையில் எண்ணெய்க் குழாயில் திடீரென தீப்பிடித்து பல அடி உயரத்துக்கு தீப்பிழம்பு வெளிப்பட்டது. அங்கு கும்பலாக எரிபொருள் பிடித்துக் கொண்டிருந்தோர் மீது நொடிப்பொழுதில் தீ பரவ, கூட்டம் கூட்டமாக மக்கள் எரிந்து சாம்பலாகினர். முதற்கட்டமாக 20 பேர் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், தீ அணைக்கப்பட்ட பின், பல உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்