SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

537
12/12/2018

ஆஸ்திரேலியாவில் 102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். நரம்பியல் நோய்க்கான மருத்துவ சிகிச்சைக்ககு நிதி திரட்டுவதற்காக 102 வயது மூதாட்டியான இர்னே ஓஷியா ( irene oshea ) புதிய முயற்சியில் இறங்கினார். எஸ்ஏ ஸ்கை டைவிங் என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் விமானத்தில் பறந்த அவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராஷூட் உதவியுடன் கீழே குதித்தார். 10 ஆண்டுகள் ஸ்கைடைவிங்கில் அனுபவம் கொண்ட ஜெட் ஸ்மித் என்பவரும் மூதாட்டியுடன் இணைந்து குதித்தார். முதல் முறையாக தமது 100வது வயதில் ஸ்கைடைவிங் செய்த இர்னே, தற்போது ஸ்கைடைவிங் செய்த அதிக வயதான பெண் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலே இருந்து குதித்த போது மிகவும் குளிராக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்