SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

658
10/12/2018

எரிபொருளுக்கான வரி உயர்வை கண்டித்து பிரான்சில் தொடங்கப்பட்ட போராட்டம், அந்நாட்டு அதிபருக்கு எதிராக திரும்பி மிகத் தீவிரமடைந்து வருகிறது. ‘மஞ்சள் ஆடை’ என்ற பெயரில் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்து போராட்டக்காரர்கள் வீதியில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, 4வது வாரமாக பாரீஸ் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கின. 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும், பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. 4வது வாரத்தில் நேற்று முன்தினம் தான் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை போலீசார் 1,700 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே அண்டை நாடுகளான பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலும் இந்த போராட்டம் பரவியுள்ளது. மேலும் சமூக வலைதளத்தில் போராட்ட தகவல் பரப்பும் பல கணக்குகள் ரஷ்யாவுடன் தொடர்புடையதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், எந்த தலைமையும் இல்லாமல் நடக்கும் பிரான்ஸ் போராட்டம் அந்நாட்டு அரசுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்