SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 12,000 பேர்..: உடல்கள் புதைக்கப்பட்ட 200 சவக்குழிகள் கண்டுபிடிப்பு!

662
08/11/2018

பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12,000 பேரை கொன்று புதைத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஈராக்குக்குள் 2014ம் ஆண்டு அவர்கள் புகுந்தனர். படிப்படியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அவர்கள் கைவசம் சென்றன. அப்போது அவர்களுக்கு எதிரான நபர்களை கொன்று குவித்தார்கள். இந்நிலையில், அப்போது அவர்கள் கொன்று குவித்த நபர்களை புதைத்த இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 இடங்களில் சவக்குழிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொது சவக்குழிக்குள்ளும் நூற்றுக்கணக்கான நபர்களை புதைத்துள்ளனர். நினிவே, கிர்குக், சலாவுதீன், அன்பார் பிராந்தியங்களில் இந்த சவக்குழிகள் இருக்கின்றன. அதில் கஸ்பா சின்கோல் என்ற இடத்தில் மட்டுமே 6 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 200 சவக்குழிகளிலும் சேர்த்து சுமார் 12,000 பேர் புதைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் யார், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்