SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு: 10 பேர் பலி

500
12/07/2018

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஞ்சசீர் மாகாண மலைகளில் உறைபனி ஏரி அமைந்துள்ளது. இதில் உள்ள பனி உருகி ஏரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியாகிய காரணத்தால் இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் பேரிடர் மேலாண்மைத்துறை செய்தித்தொடர்பாளர் ஓமர் முகமதி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்