SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பெற்றோர்கள் மீண்டும் குழந்தைகளுடன் இணைந்தனர்

565
12/07/2018

அமெரிக்கா: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் ஊடுறுவும் மக்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டவிரோத குடியேறிகளை அடைக்கும் சிறைச்சாலையில், குழந்தைகளை உடன் வைத்துகொள்ள அனுமதி இல்லை. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரை பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிக்கும் இந்த நடைமுறைக்கு உலக அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பெற்றோர்கள் மீண்டும் தங்கள் குழந்தைகளுடன் இணைந்தனர். கடந்த 55 நாட்களாக தங்கள் குழந்தைகளை பிரிந்திருந்த பெற்றோர்கள், மீண்டும் இணைந்துள்ளதால் கட்டித் தழுவி கண்ணீர் மல்க பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்