SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி..!

677
13/06/2018

டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சுமார் 1.48 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர், காலை உடற்பயிற்சியில் சில அம்சங்களை வெளியிட்டுள்ளதாகவும், யோகாவை தவிர்த்து, இயற்கையின் ஐந்து தத்துவங்களான ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வதாக கூறியுள்ளார். இது தமக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார். மற்றொரு ட்விட்டரில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உடற்தகுதி குறித்த வீடியோவை வெளியிடுமாறு மோடி சவால் விடுத்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-08-2018

    19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்