SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: 2வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

291
13/06/2018

கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிலுள்ள கேளிக்கை விடுதிக்குள் ஆயுதம் தாங்கிய நபர் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதில், 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில், ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 53 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களுக்கான நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் ஃப்லா, ஆர்லாண்டோவில் உள்ள பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் புகைப்படங்கள் வைக்கப்பட்டதை பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு உறவினர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • babyballon_trump

    பேபி பலூனில் அதிபர் டிரம் முகம் : அமெரிக்க அதிபரை விமர்சித்து வினோத பரப்புரை

  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்