SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

803
25/05/2018

சென்னை நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவாகார இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.சென்னையில் தற்போது நேரு பூங்கா முதல் ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையிலும், விமான நிலையம் - சின்னமலை இடையேயும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், நேரு பூங்கா- சென்ட்ரல் (2.5 கி.மீ) மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் (4.35 கி.மீ) வழித்தடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த புதிய வழித்தடங்களில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு சான்றிதழ் அளித்ததையடுத்து மெட்ரோ ரயில் சேவை பயணிகளுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்