SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானில் மரப்பாலம் இடிந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு

306
16/05/2018

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றின் மீதிருந்த மரப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்கிற மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஆற்றை மக்கள் கடந்து செல்வதற்காக ஆற்றின் நடுவே மரத்தினாலான தொங்கு பாலம் இருந்தது. பைசலாபாத் மற்றும் லாகூரில் இருந்து 2 தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் ஆற்றின் நடுவே இருந்த மரப்பாலத்தில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென அந்த மரப்பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இதில் பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் மீட்பு குழுவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்பு குழுவினர் ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

  • 2018_kalambirth

    அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம் : நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர், மாணவ மாணவிகள் மரியாதை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்