SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் ரேஸ் மைதானம், சூதாட்ட விடுதி, வணிக வளாகம் உள்பட பல்வேறு வசதிகள் அடங்கிய பிரமாண்ட சொகுசுக் கப்பல்

785
25/04/2018

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான நார்வேஜியன் பிலிஸ் ((Norwegian bliss)) தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு இந்தக் கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் ஜெர்மனியில் தொடங்கின. தற்போது இந்தக் கப்பல் நார்வேஜியன் குரூஸ் லைனர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 21ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியது.ஆயிரத்து 82 அடி நீளமும், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 28 டன் எடை கொண்ட இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பிரம்மாண்டமான நீச்சல்குளம், குளித்துக் கொண்டே திரைப்படம் பார்க்கும் வசதி, மிகப்பெரிய நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கள், அசர வைக்கும் மதுபான பார், அனைத்திற்கும் மேலாக சிறிய ரக கார்கள் ஓட்டி மகிழும் வகையில் ரேஸ் மைதானம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.மேலும் உடற்பயிற்சிக் கூடம், சூதாட்ட விடுதி, வணிக வளாகம் போன்றவையும் நார்வேஜியன் கப்பலில் அமைந்துள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-08-2018

    17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்