SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

893
24/04/2018

ஷாங்காய்: சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் ஹுயாங்பூ மாவட்டத்தில் முதன் முறையாக ஊழியர் இன்றி தானாக இயங்கும் அரசு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து பணிகளையும் எந்திரங்களே கவனிக்கின்றன. மனிதர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் மென்பொருளுடன் கூடிய கம்ப்யூட்டர், ஹோலோகிராம் எந்திரம், பேசும் ரோபோக்கள், தொடு திரைகள் என இவை அனைத்தும் ஊழியர்களின் பணியை திறம்பட செய்கின்றன. பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் பில் போடுதல் போன்ற பணிகளையும் செய்கின்றன. இந்த வங்கியில் தங்கம் விற்பனை, பண மாற்றம், ரியல் எஸ்டேட் முதலீடு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இந்த வங்கிக்கு பாதுகாவலர்களும், குறிப்பிட்ட பணிக்கு ஒரு சில ஊழியர்களும் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்