SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

2021
24/04/2018

இது வரை நடந்த அணு உலை விபத்துகளில் மிக மோசமான விபத்து, செர்னோபில் அணுமின் உலை விபத்து. அப்போது சோவியத் ஒன்றியத்தில் இருந்த உக்ரைனின் பிரிப்யாட் நகருக்கு அருகில் உள்ள செர்னோபில் நகரத்தில் இந்த அணு மின்உலை அமைந்திருந்தது. இதில் 4 அணு உலைகள் செயல்பட்டன. ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் பெற்றவை. 1986 ஏப்ரல் 26ம் தேதி அதிகாலையில், சரியாகத் திட்டமிடப்படாத சோதனை ஒன்று 4வது அணு உலையில் நடத்திக் கொண்டிருந்தபோது, விபத்து நேர்ந்தது. சம்பவத்தின்போது சங்கிலித் தொடர்வினை ஏற்பட்டு அணு உலையில் வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் அணுக் கதிர்வீச்சு வேகமாகப் பரவத் தொடங்கியது. ஏப்ரல் 27-ல்தான், அதாவது விபத்து நடந்து ஒரு நாளுக்குப் பின்னரே பிரிப்யாட் நகரில் வசித்த 50,000க்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். எனினும், உடனடி மரணம், புற்றுநோய் பாதிப்புகள் என்று லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். 4 அணு உலையில் விபத்து நேர்ந்து அழிந்தை அடுத்து, ஒரு வருட காலத்தில் மற்ற 3 அணு உலைகள் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பேரழிவு நிகழ்ந்து கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், உக்ரேனிய அதிகாரிகள் பத்திரிகையாளர்களை அழைத்து அணுமின் நிலையத்தை பார்வையிட செய்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்