SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

800
22/02/2018

புளோரிடா: புளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புளோரிடா கேபிடல் கட்டடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநில உயர்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்தவர்கள், மாநிலத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். துப்பாக்கிகளின் விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிகள் சார்ந்த சட்டதிட்டங்கள் மாற்றப்படவேண்டும் என்றும், தங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்