சென்னப்பன்கொட்டாயில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி
7/24/2019 2:13:37 AM
பாலக்கோடு, ஜூலை 24: பாலக்கோடு அருகே சென்னப்பன்கொட்டாயில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நெல்லூர் ஊராட்சியில் சென்னப்பன் கொட்டாய் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் இப்பகுதியில் போர்வெல் மூலம் குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 15நாட்களுக்கு ஒருமுறை தான் இப்பகுதி மக்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியிலும் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக, தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதிவில்லை. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 15நாட்களுக்கு ஒரு முறை, இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு வீட்டுக்கு 3குடங்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
மேலும் செய்திகள்
கடத்தூர் பகுதியில் சாலையோரம் கட்டி வைக்கப்படும் கால்நடைகளால் விபத்து அபாயம்
பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா
கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாத்தியார் கொட்டாய் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்
தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
அரூர் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்