தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
7/24/2019 2:10:53 AM
தர்மபுரி, ஜூலை 24: தர்மபுரி அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரிடம் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பொம்மனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(41). இவர் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் இருந்து மொரப்பூருக்கு விஜயகுமார் பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது, சாமண்டஅள்ளி ஏரிக்கரை அருகே வந்தபோது திடீரென வாலிபர் ஒருவர் வழிமறித்தார். பின்னர் அந்த வாலிபர் கற்களை பஸ் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. இதுகுறித்து விஜயகுமார் மொரப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அரூர் அடுத்த இளவடை பகுதியை சேர்ந்த சக்கரபாணி(28) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் 13,595 அலுவலர்கள்
தர்மபுரி சாலை விநாயகர் கோயிலில் சாலை விரிவாக்க பணி தாமதத்தால் அவதி
உள்ளாட்சி தேர்தலுக்கு 4வது நாளில் 591 பேர் மனு தாக்கல்
நான்கு வழி சாலை பணிக்காக 100க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டி சாய்ப்பு
காரிமங்கலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
எல்ஐசி உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்