SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோத்தகிரியில் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா துவக்கம்

1/3/2018 9:01:44 AM

கோத்தகிரி, ஜன.3: கோத்தகிரியில் படுகர் இனமக்கள் கொண்டாடும் ஹெத்தையம்மன் கோயில் விழா துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர்இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயில் திருவிழா கோத்தகிரி அருகே கேர்பெட்டா பகுதியில் நேற்று முன்தினம் இரவு துவங்கியது. இதற்காக கடந்த 25 நாட்களுக்கு முன் பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்.ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஹெத்தையம்மன் கோயிலில் அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நேற்று மாவட்டம் முழுவதிலும் இருந்து படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, வண்ணக் குடைகளின் கீழ் மடிமனை பகுதிக்கு சென்று அங்கு தங்கி அம்மனை வழிபட்டனர் கோத்தகிரியை அடுத்த குரங்காடு சீமைக்குட்பட்ட பேரகணி, பெத்தளா, பெப்பேன், ஒன்னதலை, கூக்கல், சின்னக்குன்னூர், ஹெப்பநாடு ஆகிய கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மடிமனை கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

விழாவின் ஒரு பகுதியாக கேர்பெட்டா கிராமத்தில் நேற்று அம்மன் அருள்வாக்கு மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். நாளை (புதன்கிழமை) பேரகணி கோயிலிலும், 5ம் தேதி காத்துக்குளி கிராமத்திலும், 6ம் தேதி ஒன்னதலை கிராமத்திலும் ஹெத்தையம்மன் திருவிழா நடக்கிறது.பேரகணியில் நடைபெறும் விழாவில் நீலகிரி மாவட்டம் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் படுகர் இன மக்களும் பங்கேற்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்