SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அணைகளை தூர்வார வேண்டும்

10/5/2017 10:09:49 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, கால்வாய்களை வடகிழக்கு பருவமழைக்கு முன் தூர்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அதிக அணைகள் கொண்ட மாவட்டமாக தர்மபுரி உள்ளது. மலை மற்றும் வனங்கள் நிறைந்த பகுதியாக தர்மபுரி உள்ளதால், அணைகள் மற்றும் தடுப்பு கசிவுநீர் குட்டைகள், ஏரிகள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குழி, தும்பலஅள்ளி, வரட்டாறு மற்றும் ஈச்சம்பாடி அணைக்கட்டுகள் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்மழை பெய்தால், இந்த அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும். வாணியாறு, தொப்பையாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியாக ஏற்காடு அடிவாரம் உள்ளது.

சின்னாறு அணைக்கு பஞ்சப்பள்ளி மலைக்குன்றுகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, கெலமங்கலம் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால், தண்ணீர் வரத்து இருக்கும். நாகாவதி அணைக்கு சுற்றுவட்டார அடர்ந்த காடுகளில் மழை பெய்தால் தண்ணீர் அணைக்கு வரும். தும்பலஅள்ளி அணைக்கு, தாமரை ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி காடுகளில் மழை பெய்தால் அணைக்கு தண்ணீர் வரும். கேசர்குழி அணைக்கு கள்ளிக்காடு பகுதியில் மழைபெய்தால் தண்ணீர் அணைக்கு வருகை தரும். சித்தேரி மலையில் மழைபெய்தால் வரட்டாறு அணைக்கு தண்ணீர் வரும். ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து உபரிநீர் மற்றும் ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதி காடுகளில் மழை பெய்தால் அணைக்கு மழைநீர் வரும்.

 வாணியாறு கொள்ளளவு 65.27 அடி, சின்னாறு 50 அடி, தொப்பையாறு 50.18 அடி, நாகாவதி 24.6 அடி, கேசர்குழி 25.2 அடி, தும்பலஅள்ளி 14.76அடி, வரட்டாறு 34.45அடி, ஈச்சம்பாடி 17.35 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது அணைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் மதகுகள் பழுதடைந்து உள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் பழுதுபார்க்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நடக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் (100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்) அனைத்து அணைகள் மற்றும் அணைக்கு வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும்.

அணைகள் தூர்வாரினால், பருவமழை நீரை முழுமையாக சேமித்து வைக்க உதவியாக இருக்கும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 853.10 மில்லி மீட்டர். இதுவரை 624.66 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 8 அணைகளும், 73 ஏரிகளும் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 634 ஏரிகள் உள்ளன,’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்