SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் அகற்றிய பின்னரும் கேப்பரை பகுதியில் திறந்த வெளியில் மது விற்பனை தடுத்து நிறுத்த கோரிக்கை

7/1/2017 11:32:20 AM

புதுக்கோட்டை:  கேப்பரை பகுதியில் டாஸ்மாக் கடை அகற்றிய பின்னரும் திறந்த ளியில் மது விற்பனை நடைபெறுகிறது.இதனை தடுத்து நிறுத்த வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் அருகில் உள்ள மதுபான கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் திருத்தம் கோரி தமிழக அரசு சார்பில தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 3 ஆயிரத்து 400 டாஸ்மாக் கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மூடப்பட்டன. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருவரங்குளம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர், பொன்னமராவதி, திருமயம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 90 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

இதில் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மட்டும் 14 கடைகள் இருந்ததில் தற்போது ஒரு கடை மட்டுமே செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 13 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதே போல் புதுக்கோட்டை அருகே உள்ள கேப்பரையில் உள்ள டாஸ்மாக் கடையும் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது கேப்பரையில் உள்ள டாஸ்மாக் கடை இருந்த இடத்தின் அருகே தற்போது 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் மது அருந்தி விட்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்து வருகின்றனர்.  மதுவிற்பனை செய்பவர்கள் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனை செய்வது போல் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்