SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம்

5/22/2017 10:41:00 AM

பொன்னமராவதி:    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஊரின் மையப்பகுதியில் கட்டிடவசதியின்றி பெரும் நெருக்கடியில் செயல்பட்டு வந்தது. இதற்காக இப்பகுதி பொதுமக்கள் புதிய இடத்தில் இந்த பள்ளிக்கு கட்டடிம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இப்பள்ளிக்கு புதிதாக  ஆலவயல்-தூத்தூர் சாலை ஓரம் இடம் ஒதுக்கி ரூ.1கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வருட கல்வியாண்டின் தொடக்கத்திலேயே இந்த பள்ளிக்கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் இதுவரை திறக்கப்படவில்லை.  இதனால் இப்போது செயல்பட்டு வரும் பள்ளியில் சிறிது மழைபெய்தால் கூட ஒரு சில வகுப்பு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிடும் நிலையுள்ளது. மேலும் இங்கு ஆலவயல், தூத்தூர், கண்டியாநத்தம். அம்மன்குறிச்சி, கொப்பனாபட்டி, நகரப்பட்டி,கல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 750மாணவ,மாணவிகள் பயில்கின்றனர். 22ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். உட்கார இடவசதியின்றி பெரும் நெருக்கடியில் உட்கார்ந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி  கட்டிடப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்தப்பள்ளியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்