SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடியக்காட்டில் கசப்பில்லாத பழு பாகற்காய் விளைச்சல் அமோகம்

12/20/2016 11:38:52 AM

வேதாரண்யம், : கோடியக்காட்டில் கசப்பில்லாத பழு பாகற்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. வேதாரண்யம் தாலுக்கா  கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கோடியக்காடு அமைந்துள்ளது. இந்த காட்டில் 154 மூலிகை செடிகள் உள்பட 271 வகையான தாவரங்கள் உள்ளது. இதில் பலா, நாவல், கருந்துவரை, வாசா, காசான் போன்ற மரங்களும் உள்ளன. இந்த காட்டில் 17 சதவீத மரங்களும் 43 சதவீதம் மூலிகைகளும் 25 சதவீதம் புதர்களும் 16 சதவீதம் கொடிகளும் உள்ளன. கொடி வகையை சேர்ந்த பழு பாகற்காய் என்று அழைக்கப்படும் கசப்பில்லாத பாகற்காய் அதிகளவில் விளைகிறது. இயற்கையாக விளையும் பாகற்காய்களை முன்பெல்லாம் ஆதிவாசிகள்,  பறித்து விற்பனைக்கு கொண்டு வந்தார்கள். சில ஆண்டுகளாக வனத்துறையினர் இந்த பாகற்காய்களை எடுத்து செல்ல அனுமதிக்காமல் அங்குள்ள பறவைகளுக்கு பயன்படும் வகையில் பாதுகாத்து வருகிறார்கள்.  இந்த பழுபாகற்காயை இறால், மாமிசத்துடன் சேர்த்து அசைவ பிரியர்கள் சமையத்து உண்பார்கள். சைவ பிரியர்களும் இதை சாம்பார் மற்றும் வறுவல் செய்து சாப்பிடுகிறார்கள். வேதாரண்யம் காய்கறி கடைகளில் கிலோ ரூ.100 முதல் 120  விற்கப்படுகிறது. தற்போது விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் பழுபாகற்காய் தோட்டத்திற்கு செயற்கை உரம் மற்றும் மருந்து அடிப்பதால் அதன் இயற்கையான தன்மையை இழந்து வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்