SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை வேளாண்மை கல்லூரி பேராசிரியர் தகவல்

7/4/2016 10:22:11 AM

மதுரை, :  தென்னை சாகுபடியில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று மதுஐர வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘மரங்களில் பராமரிப்பு செலவுகள் குறைவு, ஆண்டு முழுவதும் வருமானம் போன்ற காரணங்களுகாகவே தென்னையை விவசாயிகள் அதிகளவு நடவு செய்கின்றனர்.

தென்னை மரங்களுக்கு இடையில் ஏராளமான இடைவெளி நிலங்கள் கிைடக்கும். தென்னை மரங்களின் இடைவெளியில் ஊடு பயிராக குறுகிய கால பயிர்களான வெண்டை, நிலக்கடலை, சூரியகாந்தி, மஞ்சள், இஞ்சி, கிழங்கு வகைகள் சாகுபடி செய்தால் ஒரு குறிப்பிட்ட வருமானம் சம்பாதிக்கலாம்  அதேபோல் நீண்ட கால தாவரமான கோகோ  பயிர்கள் பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானம் கிடைக்கும்.

ஆனால் தென்னை மரங்களின் இடைவெளியில் வாழை சாகுபடி செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக வாழை ரகங்களை சேர்ந்த பூவன், மொந்தன் சாகுபடி செய்வதால் அதிக வருமானம பெறலாம். தென்னை மரங்கள் இடைவெளியில் தேவையற்ற களைகள் வளர்ந்தால் உடனே அகற்றி விட வேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண்ணின் வளம் செழிப்படையும்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HalloweenDogParade

    நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்!

  • DallasTornado2210

    டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு

  • PacificPalisadesFire

    லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்!

  • BeloHorizontePlaneCrash

    பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி

  • NaruhitoEnthronement

    ஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்