SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விராலிமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

6/2/2016 11:00:12 AM

விராலிமலை :  விராலிமலை தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம்  (ஜமாபந்தி)  கலெக்டர்  கணேஷ் தலைமையில்  நேற்று  நடைபெற்றது. ஜமாபந்தியை கலெக்டர் கணேஷ்  துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு விதை கிராம மானியத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரூ.1144 மதிப்பீட்டில் 24 கிலோ பயறு வகைகளும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட
உதவிகளை வழங்கினார்.  

மேலும்  கொடும்பாளுர் கிராமம் கசவனூரில் அரசு தொழில் பயிற்சி மையம் கட்டுவதற்கு தோ;வு செய்யப்பட்டுள்ள நிலத்தையும், விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிட கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் நில அளவை கருவிகளை சரிபார்த்து ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்) அண்ணாமலை, தாசில்தார் சுவாமிநாதன், தனி தாசில்தார்கள் சதீஸ், ரவிச்சந்திரன், ஆர்ஐ சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்