சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா
4/29/2016 11:57:41 AM
நெல்லை, : சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா ெதாடங்கியது. சாத்தான்குளத்தை அடுத்த சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இசக்கியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அலங்கார பூஜை நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடக்கிறது. நாளை காலை தீச்சட்டி ஏந்தி சாமியாட்டமும், தொடர்ந்து வாண வேடிக்கைகளும் நடைபெறுகிறது. மறுநாள் சிறப்பு அலங்கார பூஜை செய்யப்படுகிறது.
இறுதிநாளான 30ந்தேதி சாமி ஊர்வலம் சிறப்பாக நடைபெறும். கொடை விழாவையொட்டி மதியம் அன்னதானம வழங்கப்படுகிறது. இரவு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. டாக்டர் பிரேமச்சந்திரன் இசை நிகழ்ச்சியும் இடம்பெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி நடத்தப்படும். ஏற்பாடுகளை தர்மகர்த்தா செல்லப்பாண்டியன், விழாக்குழு தலைவர் பாலச்சந்திரன், ராஜசேகரன் உட்பட விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடியில் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
குப்பை தொட்டியாக மாறி வரும் ஊராட்சி கிணறுகள் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
திருவழுதிநாடார்விளை அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி
மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு
தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி அமமுக நாற்று நடும் போராட்டம்
சாத்தான்குளம் அருகே தரமற்ற நிலையில் சாலை அமைப்பு
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு