SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டராதித்த சோழர்-செம்பியன் மாதேவி உருவச்சிலை திறப்பு விழா

4/27/2016 11:51:57 AM

திருமானூர் :  திருமானூர் அருகே கண்டராதித்த சோழர்-செம்பியன் மாதேவியார் உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் கிராமத்தில் கி.பி 907 முதல் கி.பி 953 ஆண்டு வரை ஆட்சி புரிந்த தில்லை சிதம்பரத்து நடராஜ பெருமாள்  கோயிலுக்கு  பொன் கூரை வேய்ந்த உலகப் புகழ் பெற்ற பராந்தகச் சக்கரவர்த்தியின் இளைய மகன் கண்டராதித்த சோழனால் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வேத விற்பனர்களுக்காக உருவாக்கப்பட்ட ஊர்தான் கண்டராதித்தம் கிராமம்.

இந்த கிராமத்தில் இப்பகுதி மக்களும் விவசாயிகளும் பயனடையும் வகையில் இச்சோழனால் சுமார் 415 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்ட ஏரிதான் சோழரின் மனைவி பெயரில் வெட்டப்பட்ட செம்பியன் மாதேவி பெரிய  ஏரியாகும். இந்த ஏரியில் உள்ள நீர்பிடிப்பினால் திருமானூர் ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயனடைகின்றன. தற்போது இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு இந்த பகுதியை சிறப்படைய செய்த கண்டராதித்த சோழன், செம்பியன் மாதேவிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், கண்டிராதித்த சோழர், செம்பியன் மாதேவியருக்கு ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்களால் சிலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா கண்டிராதித்தம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை  நடைபெற்றது. ஊராட்சி தலைவர் திருவாசகமணி, முன்னாள் தஞ்சை மாவட்ட கலெக்டர் ராமு முன்னிலை வகித்தனர். தரும ஆதினம் கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் தலைமை வகித்து சிலைகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, சிறப்பு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக சிலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் வரவேற்றார். தலைமை ஆசிரியை அல்லி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திருமழபாடி தமிழ்ச்சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் திருநாவுக்கரசு, பேராசிரியர்(ஓய்வு) முனைவர் கவிதியாகராஜன், புவியல் ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிலை அமைப்பாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக கண்டராதித்த சோழர்- செம்பியன் மாதேவியருக்கு பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

 • 20aacident_died11

  சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

 • 27-05-2019

  27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்