SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்யாண ராமர் கோயிலில் சிவனடியார்கள் உழவார பணி

3/14/2016 9:54:46 AM

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் கோயிலில், சிவனடியார்கள் உழவாரப்பணியை மேற்கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தென்கரைக்கோட்டையில் சுமார் 700 ஆண்டு பழமையான சென்னப்பநாயக்கர் காலத்து கோட்டையில் கல்யாணராமர் கோயில் உள்ளது. 40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த கோட்டை போதிய பராமரிப்பில்லாத காரணத்தால் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இங்குள்ள கோயிலில் மக்கள் தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையறிந்த தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு திருத்தொண்டர்கள் 100 பேர், கோட்டையில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக தூய்மைப்பணியில் ஈடுபட்ட இவர்கள்,அடுத்தகட்டமாக ஆயிரம் தொண்டர்கள் இணைந்து கோயில் புனரமைப்பு மற்றும் 50 ஆண்டுக்கு மேலாக நடத்தப்படாத தேர்திருவிழாவை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால்,அதை கண்டறிந்து மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த பணியில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் சங்கர், அமைப்பாளர் ராமநாதன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்