SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வருவோர் இருவாரங்கள் தனிமைப்படுத்தி கொள்வது நல்லது

3/19/2020 2:56:59 AM

தென்காசி, மார்ச் 19:  தென்காசி கலெக்டர் அருண்சுந்தர் தயாளன்  நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாணை 347ன் படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நடவடிக்கைகள், வருகிற 31ம் தேதி வரை நடைபெறும். பஸ்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.  கேரளா எல்லையான புளியரை மற்றும் மேக்கரையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கும் சோதனை நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றும், வெளிநாடுகளில் இருந்தும் திரும்பியவர்கள், தங்களை இரு வாரங்களுக்கு சுய தனிமைப்படுத்தி கொண்டால் நல்லது. மற்றபடி பொதுமக்கள் பயம் கொள்ள வேண்டாம். காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முகமூடி மற்றும் சனிடைசரை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்.

கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.   பொதுமக்கள் 04633 290548 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.  வதந்தியை பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு வருவதை தற்போது தவிர்க்க வேண்டும். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது என்ற தகவல் தவறானது.  சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வருகின்றனர்.  அவர்களுக்கு உரிய முறையில் அறிவுரை வழங்கப்படுகிறது. மற்றபடி எல்லை பகுதியில் எந்த போக்குவரத்து தடையும் விதிக்கப்படவில்லை.

16ம் தேதி முதல் 1437 வாகனங்களுக்கு எல்லைப்பகுதியில் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. தொண்டை பகுதியில் சளி மாதிரி எடுத்து சோதனை செய்வதன் அடிப்படையில் கொரோனா  நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. இதற்கான சோதனை மையம், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 2 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது.  அவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு இல்லை  என்பது தெரியவந்தது.  கொரோனா நோய் சம்பந்தமாக தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். இவ்வாறு கூறினார்.

ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை
தென்னக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்படி ஐஜி வனிதா, எஸ்பி செந்தில்குமார் ஆகியோரின் தலைமையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. குறிப்பாக கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள தென்காசி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சிக்கந்தர், லெனின்குமார், பகிஸ் ஆகியோரது தலைமையில் கொரானா வைரஸ் தடுப்பு குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இதில் டாக்டர் சங்கரகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரயில்வே ஊழியர்களுக்கு காய்ச்சல் குறித்த சிறப்பு பரிசோதனைகளை நடத்தினர். மேலும் கொரொனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்