SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லாரியை சிறை பிடித்து போராட்டம்: மணல் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

2/27/2020 9:37:21 AM

திருவள்ளூர்,  பிப். 27: பிஞ்சிவாக்கம் பகுதியில் கூவம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பகுதியில் லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது,  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது பிஞ்சிவாக்கம் கிராமம். இந்த பகுதியில் 2,250 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 7.58 கோடியில் புதிய தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம்  120 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் உயரம் தடுப்பணை கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.  இந்த நிலையில் பிஞ்சிவாக்கம் தடுப்பணை கட்டும் பகுதி உள்ள கூவம் ஆற்றில் மணல் கொள்ளை நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து கிராம மக்கள்  திரண்டு வந்து கூவம் ஆற்றிலிருந்து வந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் தடுப்பணை கட்டுவதற்காக ஜல்லி, செங்கல், சிமெண்ட் கொண்டு வரும் லாரியிலேயே மீண்டும் தடுப்பணை கட்டும் பகுதியிலிருந்து மணல் அள்ளி செல்வதாக கூறினர்.  இதுகுறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதுபோல் நடை பெறவில்லை எனக்கூறி போராட்டக்காரர்களை  சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்