SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடும்பத்தினருடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு

2/27/2020 9:37:04 AM

சென்னை, பிப். 27: குடும்பத்துடன் மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் உயிரிழந்தான்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பாக்கம் கிராமம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஹேமநாதன் (20). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தனது சகோதரன் மோகன் மற்றும் அக்கா கலைவாணி, தங்கை ஜீவிதா ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார்.  பின்னர் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடலில்  தனது சகோதரனுடன் ஹேமநாதன் குளித்துள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கி ஹேமநாதன் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது சகோதரன் மோகன் மற்றும் அவரது சகோதரிகள் கூச்சலிட்டனர். இதை கவனித்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உடனே ஹேமநாதனை மீட்டனர்.

ஆனாலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஹேமநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்