SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் கோட்டூர் ஒன்றியக் குழு தலைவர் வலியுறுத்தல்

2/27/2020 9:24:49 AM

மன்னார்குடி, பிப். 27: பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கோட்டூரில் நடைபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஒன்றியக்குழு தலைவர் வலியுறுத்தினார்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு பிப்ரவரி 25,27,28 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக மாணவர் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. கோட்டூர் வட்டார வள மையத்தில் நடை பெற்ற பயிற்சி வகுப்பை கோட்டூர் ஒன்றியக் குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டனர்.அப்போது பயிற்சி பெரும் ஆசிரியர்களிடையே ஒன்றியக் குழு தலைவர் மணிமேகலை முருகேசன் பேசுகையில், கஜா புயலில் பழுதான பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சுற்றுச் சவர்கள் சரிசெய்ய விரைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பில் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் தங்கபாபு, தலைமையாசிரியர் விக்டர் பெர்னாண்டோ, திலகவதி, செல்வமணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் வீரமணி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். ஆசிரியர் பயிற்றுநர்கள் சிவசங்கரி, அனிதா, ராதிகா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியினை வழங்கினர். பயிற்சி நிறைவில் ஆசிரி யர் பயிற்றுநர் செல்வமணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்