SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பங்கேற்பு ஆதிச்சமங்கலத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 152 பேருக்கு நலத்திட்ட உதவி

2/27/2020 9:24:33 AM

வலங்கைமான், பிப்.27: வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேல்காணல் முகாமில் 152 பயனாளிகளுக்கு 12 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆதிச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் நேல்காணல் முகாம் கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் தெய்வநாயகி வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ரவிச்சந்திரன், ஆர்டிஓ ஜெயபிரீத்தா, ஆதிதிராவிடர் நல அலுவலர் பூஷ்ணகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைபட்டாவும், 85 பயனாளிகளுக்கு ரூ.3.02 லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளும், வேளாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1.11 லட்சம் மதிப்பிலான மழை தூவான், தெளிப்புநீர் கருவி, தார்பாய், மற்றும் இடுபொருட்களும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.19,910 மதிப்பிலான கொய்யாகன்று, வெண்டை விதை மற்றும் திசுவாழைக்கன்று ஆகியவைகளும், ஆக மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.12.33 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

முன்னதாக துறைவாரியாக அரசு நலதிட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். ஆதிச்சமங்கலம் ஊராட்சித் தலைவர் துர்காதேவி மற்றும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து அலுவலர்களிடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் தேவகி, ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், தமிழ்செல்வி, வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்