SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதிமீறல்களுக்கு இடம் கொடுக்காமல் பிளஸ்2 பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்

2/27/2020 9:15:41 AM

பெரம்பலூர், பிப். 27: பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை விதிமீறல்களுக்கு இடம் கொடுக்காமல் நடத்தி முடிக்க தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்2 எனப்படும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு, ஆதிதிராவிடர் நலம், அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 73 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 3,854 மாணவர்கள், 4,048 மாணவிகள் என மொத்தம் 7,902 பேர் 32 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். தினமும் காலையில் 10 மணிக்கு துவங்கி பகல் 1.15 மணி வரை பொதுத்தேர்வுகள் நடக்கிறது.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகள் நடத்தப்படும் 32 தேர்வு மையங்களிலும் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள பெரம்பலூர் மாவட்ட சாரண சாரணியர் கூட்டரங்கில் நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர்கள் பெரம்பலூர் மாரிமீனாள், வேப்பூர் குழந்தைராஜன் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்து பேசியதாவது: தேர்வுகள் அரசு தேர்வுத்துறை நிர்ணயித்துள்ள கால நேரத்துக்குள் துல்லியமாக தொடங்கப்பட்டு நடத்தி முடிக்க வேண்டும். தேர்வு மையங்களில் மாணவ மாணவியருக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை அந்தந்த பள்ளிகளில் நிறைவேற்றப்பட்டு உள்ளதா என முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வுக்கு முன்னரே உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். விதிமீறல்களுக்கு இடம் கொடுக்காமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவர்கள் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும்.தேர்வு மையத்துக்கான வினாத்தாள்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் 32 தேர்வு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதேபோல் விடைத்தாள்கள், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கப்பட வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன் மற்றும் கல்வித்துறை அலுவலக தேர்வு பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்