SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு

2/27/2020 9:15:09 AM

அரியலூர், பிப். 27: அரியலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குளிர்பதன கிடங்கை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் ரயில் நிலையம் அருகில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் 61.31 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.
இதில் நபார்டு ஊரக உட்கட்டமைப்பு திட்டம் மூலம் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 25 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வாடகை முறையில் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இந்த குளிர்பதன கிடங்கில் தற்போது புளி, தட்டைபயிறு, கொள்ளு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோள மறைமுக ஏல நடைமுறையின் மூலம் மக்காசோளம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்யும்போது போதி விலை கிடைக்கவில்லை என்றால் குடோனில் இருப்பு வைத்து சரியான விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய ஏதுவாக உள்ளது.தற்போது மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,701 அதிகபட்ச விலையாகவும், ரூ.1,677 சராசரி விலையாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விவசாயிகளுக்கு சரியான எடை, மறைமுக ஏலம், உடனடி பண பட்டுவாடா, இலவச சேமிப்பு வசதிகள், இலவச காப்பீட்டு திட்டம், பொருளீட்டு கடன் வசதி மற்றும் உலர்கள வசதிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன என்றார்.ஆய்வின்போது, கோட்டாட்சியர் பாலாஜி, விற்பனைக்கூட செயலாளர் ஜெயகுமார், விற்பனைக்குழு மேலாளர் அன்பழகன், துணை வேளாண்மை அலுவலர் பிச்சை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.ரூ.100 கோடி நஷ்டம் ஏற்படும் நிலை இது குறித்து விவசாய சங்க மாவட்ட தலைவர் உலகநாதன் கூறும்போது. நெல் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் கோணிப் பைகளை தைப்பதற்கு சணல் வாங்கி கொடுக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இரண்டு சிப்பங்களை தனியாரிடம் விற்றால் ஒரு விவசாயிக்கு 400 ரூபாய் நஷ்டம் ஆகிறது. வேறு வழியின்றி நெல்லை பாதுகாக்க முடியாத நிலைக்கு சிலர் தனியாரிடமும் விற்று வருகின்றனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் சுமார் 80 சதவீத நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றது. கோடை காலம் துவங்கும் நிலையில் கோடை மழை பெய்தால், விவசாயிகளின் நெல் அனைத்தும் மழையில் நனைந்து வீணாய் போகும். இதனால் சுமார் ரூ.100 கோடி அளவில் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும். எனவே தட்டுப்பாடுகள் ஏற்படும் கோணிப் பைகளை உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்