SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமீனாபாத்தில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

2/27/2020 9:14:58 AM

அரியலூர், பிப். 27: அரியலூர் வட்டம் அமீனாபாத், அன்னிமங்கலத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில் வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் முகாம் நாளை நடக்கிறது. அந்தந்த தாசில்தார்கள் தலைமை வகிக்கின்றனர்.அதன்படி அரியலூர் வட்டத்தில் அமீனாபாத், அன்னிமங்கலம் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் பருக்கல் (மேற்கு), ஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் இரும்புலிக்குறிச்சி கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் ஆத்துக்குறிச்சி கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. முகாம்களில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்