SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியாண்டாங்கோவில் நுழைவாயிலில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் திணறல்

2/27/2020 9:07:34 AM

கரூர், பிப். 27: கரூர் பெரியாண்டாங்கோயில் நுழைவு வாயில் பகுதி குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.கரூர் மதுரை பைபாஸ் சாலை பகுதியில் இருந்து பெரியாண்டாங்கோயில் போன்ற பல்வேறு பகுதிகளுக்கான சாலை பிரிகிறது. இந்த பிரிவுச் சாலையோரம் ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ச்சின் வழியாக தொடர்ந்து தண்ணீர் லாரிகள் போக்குவரத்து காரணமாக, சாலையின் நுழைவு வாயில் பகுதி சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து பைபாஸ் சாலைக்கும், பைபாஸ் சாலையில் இருந்து ஆண்டாங்கோயில் போன்ற பகுதிகளுக்கும் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே அனைத்து தரப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, நுழைவு வாயில் பகுதிச் சாலையை தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்