SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைரஸ் காய்ச்சல் பீதி எதிரொலி பிராய்லர் கோழிக்கறி விலை குறைவு கிலோ 170க்கு விற்பனை

2/27/2020 9:07:09 AM

கரூர், பிப். 27: வைரஸ் காய்ச்சல் போன்ற பல்வேறு பீதிகள் காரணமாக கரூரில் பிராய்லர் கோழிக் கறி விலை ஒரளவு குறைந்துள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிக்கறி கடைகள் உள்ளன. தொழில் நகரம் என்பதால் வாரந்தோறும் விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் அதிகளவு பிராய்லர் கோழிக்கறி விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறி கிலோ ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.தற்போது இதன் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் போன்ற பீதி தமிழகத்தை சுற்றிலும் உள்ள சில மாநிலங்களில் தாக்கம் இருந்து வரும் நிலையில், இதன் தாக்கமும், தமிழகம் அளவில் பரவியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற விஷயங்கள் அதிகளவு பரப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பிராய்லர் கோழி கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ. 170க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தேவை அதிகம் இல்லாத காரணத்தினால்தான் தற்போது பிராய்லர் கோழிக்கறியின் விலை சற்று குறைந்துள்ளது எனவும், பண்டிகை காலம் துவங்கியதும் கறியின் விலை சற்று அதிகரிக்க துவங்கி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்